Miss. Malathy Arunasalam

(Retired System Operator - CEB Kollupitiya)

Malathy Arunasalam

Date of Birth: 08 December 1963 - Deceased: 20 April 2025

யாழ். கொட்டடியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. மாலதி அருணாசலம் அவர்கள் 20-04-2025  ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் - கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு புத்திரியும்,

ஜெயமலர் (ஓய்வுபெற்ற உப பீடாதிபதி), மைதிலி (வைத்தியர்), மனோராமா (ஜேர்மனி), மகபதி (ஜேர்மனி), மஞ்சுளா (ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தியாகலிங்கம் (ஓய்வுபெற்ற அதிபர்), Dr. அருலேந்திரன் (வைத்திய நிபுணர்), குகானந்தன் (ஜேர்மனி), விஜிதா (ஜேர்மனி), ஸ்ரீரங்கநாதன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரணி (அவுஸ்திரேலியா), தியா சாயணி (ஆசிரியை), மயூர சாகித்தியன் (அவுஸ்திரேலியா), கிருஸ்ணவி, சங்கவி, விஸ்ணவி, வைஸ்ணவி ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஜெறோசன், பிரிதாஜினி, நந்தகிசோ ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,

சேந்தன் (வைத்தியர்), கபிலன் (வைத்தியர்) ஆகியோரின் அன்பு மாமியும்,

கண்மயி, தெட்சிகன், காவியன், அதிமனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தவமணிதேவி, காலஞ்சென்றவர்களான கனகராஜா, கந்தையா, சாமிநாதன், திருநாவுக்கரசு (வைத்தியர்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற வரதலிங்கம் (ஓய்வுபெற்ற அதிபர்), சரஸ்வதி (இலண்டன்), காலஞ்சென்றவர்களான இராசம்மா, மீனாட்சி, வாலாம்பிகை மற்றும் விசாலாட்சி ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 6:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு. 23-04-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2025 04:00)