செல்வி. மாலதி சிவராசா

(ஓய்வு பெற்ற பிரதி அதிபர்- யா/உயரப்புலம் மெதடிஸ்ட்மிஷன் வித்தியாலயம்)

மாலதி சிவராசா

மறைவு: 20 ஜூன் 2024

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், அமுதசுரபி பொன்னையா லேன், ஆணைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி சிவராசா அவர்கள் 20-06-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராசா லிங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

ஜெயசீலன் (கனடா), சியாமளா (கனடா), மஞ்சுளா (கனடா), ஜெயதேவன் (லண்டன்), கீத்தா (இலங்கை), ஜெயந்தி (கனடா), ஜெயரங்கன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதர்ஜினி, தயாபரன், தேவதாசன், சுமிதா , முரளிதரன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜதுனன், ஜனனி, ஏரன், சேரா , அக்ஷா , ஜசாக் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

லருஷன், திவ்யா, தினேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2024 04:00)