திருமதி. மாலினி கோணேஸ்வரன்

(ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர்)

மாலினி கோணேஸ்வரன்

தோற்றம்: 11 அக்டோபர் 1950 - மறைவு: 21 நவம்பர் 2024

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்-பாரிஸ், மெல்போன்- அவுஸ்ரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாலினி கோணேஸ்வரன் அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அரியரட்ணம்- கிருபாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும்,

 செல்லையா-யோகம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா கோணேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஹர்ஷினி அவர்களின் அன்பு மாமியாரும்,

டுருவன், கெய்ரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ரஞ்சினி, விஜயகுமார்(அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீகாந்தி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவசம்பு குலேந்திரசீலன், திருக்கேதீஸ்வரன் (கனடா) மற்றும் கிருஸ்ணகுமாரி, ஜெகதீஸ்வரன் (கனடா), இந்திரகுமாரி, சூரியகுமாரி (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் மகளிர் கல்லூரி), முனீஸ்வரன் (கனடா ), சந்திரகுமாரி (இளைப்பாறிய உப அதிபர் - மானிப்பாய்  இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை Bunurong Memorial Park (790 Frankston-Dandenong Road, Dandenong South VIC 3175, Australia) இல் நடைபெறும்.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/11/2024 21:13)