திருமதி. மல்லிகாதேவி தியாகராஜா

மல்லிகாதேவி தியாகராஜா

தோற்றம்: 08 ஆகஸ்ட் 1956 - மறைவு: 30 டிசம்பர் 2024

யாழ். திருநெல்வேலி கிழக்கு முடமாவடியைப் பிறப்பிடமாகவும், Zoetermeer - நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மல்லிகாதேவி தியாகராஜா அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - திரவியம் தம்பதியினரின் அன்பு மகளும், தம்பியைா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

தாரணி, நித்தனரூபன் (நெதர்லாந்து), மதுரி (நெதர்லாந்து, பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிகுமார், ஆனோஜா, கோனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பவளகாந்தன், தனபாலசிங்கம் மற்றும் யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராசா, பொன்மலர், யோகேஸ்வரன் மற்றும் வரதலட்சுமி, குணலட்சுமி, காலஞ்சென்ற சிவகுமார், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அக்சிஜா, ஆனுஜா, அர்ஜன், சுபிக்சன், கயல்விழி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அஞ்சனா, அன்சிகா, அனமிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 6:00 மணி வரையும் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரையும், 06-01-2024 திங்கட்கிழமை 11:00 - 2:00 மணி வரையும், (Rouwcentrum Loosduinen Oude Haagweg 28, 2552 EP Den Haag, Netherlands) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் (Yarden house Ockenburgh Ockenburghstraat 21, 2553 AA Den Haag, Netherlands) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2024 05:00)