திருமதி. மங்களம் கிருஷ்ணமூர்த்தி

(ஓய்வு பெற்ற ஆசிரியை-புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி)

மங்களம் கிருஷ்ணமூர்த்தி

தோற்றம்: 18 செப்டம்பர் 1944 - மறைவு: 17 ஜூன் 2026

உடுதெனிய மீகஹமுலையைப் பிறப்பிடமாகவும், இல-134, மாபனவத்துரை வட்ட வீதி, ராமனாயக மாவத்தை, கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மங்களம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 17-06-2026 புதன்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.

அன்னார், கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராபிரியதர்ஷினி (நோர்வே), மங்களேஷ் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதீப்பாக்கியநாதன் அவர்களின் மாமியாரும்,

அவணி. அனிலா அவர்களின் செல்ல பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்19-06-2026 வௌ்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் Sanita Funeral Parlor (42/1/1, CEMETERY ROAD, KANDY) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-06-2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் மகியாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2026 00:00)