Mrs. Mangalawathany Rajendram
Date of Birth: 02 August 1940 - Deceased: 26 August 2024
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்களவதனி இராசேந்திரம் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை-ரோகினியம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
உதயகுமார் (பிரான்ஸ்), வசந்தகுமார் (பிரித்தானியா), நளினி (பிரான்ஸ்), நந்தகுமார் (கனடா), சுதாயினி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாரஞ்சினி (பிரான்ஸ்), துசியந்தினி (பிரித்தானியா), சிவபாலன் (பிரான்ஸ்), மந்தாகினி (கனடா), சந்திரசேகரம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யானிக்கா, கர்னிக்கா, சிவானி, நிலானி, மான்சி, ரிசியா, சௌமியா, நிரோஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், குணபாலசிங்கம் மற்றும் பூபாலசிங்கம் (பிரான்ஸ்), யோகமங்களவதனி (அச்சுவேலி), கமலநாயகி (அச்சுவேலி), ஜெயபாலசிங்கம் (பிரான்ஸ்), இந்துமதி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் மகேஸ்வரி, இராசகுமாரி, காலஞ்சென்றவர்களான வில்லவராயர், பாலசிங்கம் மற்றும் பவானி, காலஞ்சென்ற ஸ்ரீநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம்-தனலட்சுமி, பத்மாவதி-சிவஞானசுந்தரம், பத்மநாதன்-வனதலஷ்மி, நாகேந்திரம்-நித்தியானந்தம் கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-08-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00–3:30 வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:30–5:00 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
