திருமதி மங்களேஸ்வரி பாஸ்கரன்

(ஓய்வு நிலை சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் - உள்நாட்டு இறைவரித் திணக்களம்)

மங்களேஸ்வரி பாஸ்கரன்

தோற்றம்: 31 அக்டோபர் 1961 - மறைவு: 14 மார்ச் 2025

முல்லைத்தீவு - முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்களேஸ்வரி பாஸ்கரன் அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - இராசம்மா தம்பதியினரின் மருமகளும்,

பாஸ்கரன் (ஈஸ்வரன் பிரதர்ஸ் - கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசாங்கன் (பொறியியலாளர் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை), பிருதுவி (மென்பொறியியலாளர் - ஸ்டோக் ஹெவின்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கீதாஞ்சனா (பொறியியலாளர் -  ஶ்ரீ லங்கா டெலிகொம்) அவரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகராசா, விநாயகமூர்த்தி மற்றும் பார்வதி, கனகசபாபதி, சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற செந்தில் வடிவேல், அனந்தசயனன், கணேஸ்வரி (கனடா), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவமணி, விஜயரட்ணம், காலஞ்சென்றவர்களான தேவிகா, கனகமலர் மற்றும் மனோரஞ்சி, சாரதாதேவி, உதயகுமார், காலஞ்சென்றவர்களான குணசீலன், கேசரட்ணம் மற்றும் சிறீதரன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr. புனிதவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-03-2025 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில்  புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெறும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2025 02:42)