திருமதி. மங்கையற்கரசி கமலேஸ்வரன்
தோற்றம்: 01 அக்டோபர் 1948 - மறைவு: 23 பெப்ரவரி 2026
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையற்கரசி கமலேஸ்வரன் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை - தங்கம்மா தம்பதியினரின் நான்காவது ஆசை மகளும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம் - மீனாம்பிகை தம்பதியினரின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற கமலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
உமா, மைத்ரேயி, நிவேதிதா (நிலா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான காந்தரூபி, புவனேந்திரன் மற்றும் கமலராணி, சுபத்திராதேவி, சர்வமங்களம், ரேவதி தர்மநாயகி (தர்மினி), விஜயரஞ்சினி (ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, ஹரிச்சந்திரன், கணபதிப்பிள்ளை, அல்பிரட் மற்றும் சிவானந்தன், சேகர், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியவாணி, சந்திரவதனி, சித்திரரூபிணி, காலஞ்சென்ற சந்திரமோகன், சத்தியசீலன், வித்தியாதரன், சிவோதயன், பிரதீபனா, அருணோதயன், ராதிகா ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
காஞ்சனா, காண்டீபன், சுயீவன், அரவிந்தன், அஜீத்தா, பிரவீன், ஹர்சன், மிருணா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-02-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 8:00 மணி வரையும், 26-02-2026 வியாழக்கிழமை காலை 9:30 - 12:30 மணி வரையும் Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
