திருமதி. மங்கையற்கரசி கணபதிப்பிள்ளை (மங்கை)
மறைவு: 18 டிசம்பர் 2024
யாழ். கரவெட்டி பெரியதோட்டம் சிங்கத்தின் வளவை பிறப்பிடமாகவும், Fleet - பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையற்கரசி கணபதிப்பிள்ளை அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று பிரித்தானிய நேரம் அதிகாலை 5:05 மணியளவில் இறையருள் சேர்ந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பரதன், தாரிணி, தர்சினி, திருமாறன், தபோதினி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
எழிலரசி, தவேந்திரராஜா, சுதாஜினி, யோகராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், கமலாம்பிகை மற்றும் சபாநாதன், பாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தனலஷ்மி, பத்மநாதன், சரஸ்வதி, சிவகாமதேவி, சிவசெந்திநாதன், மனோன்மணி மற்றும் ஈஸ்வரி, யாழைப்பழித்தமொழியம்மை, சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற திரு.திருமதி பரமேஸ்வரன் (துன்னாலை), காலஞ்சென்ற திரு.திருமதி. செல்லத்துரை (வதிரி), திரு.திருமதி. விநாயகமூர்த்தி (வதிரி), காலஞ்சென்ற திரு.திருமதி சிதம்பரநாதன் (கரவெட்டி) ஆகியோரின் சம்மந்தியும்,
கேஷின், அனிஷன், ரணேஷ், சகீரா, மகிரன், நிருஜன், கிருத்திக் - அபித்தா, அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 - 4:00 மணி வரை Hendon Crematorium (Holders Hill Road, Hendon London, NW7 1NB) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.45 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
