Mrs. Mangkayarkarasi Apputthurai

Mangkayarkarasi Apputthurai

Date of Birth: 17 March 1935 - Deceased: 17 November 2025

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையற்கரசி அப்புத்துரை அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற அப்புத்துரை (நெற்களஞ்சிய பொறுப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நல்லருளானந்தம், பூபாலசிங்கம், பூபதி அம்மா, பத்மநாதன், துரைராஜா, பாலச்சந்திரன், அரியநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலசாந்தினி (பபியா - அமெரிக்கா), வரதராஜன் (இலண்டன்), வசந்தினி (தெஹிவளை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

பாஸ்கரதேவன் (அமெரிக்கா), கிரிஜா (இலண்டன்), லோகீஸ்வரன் (தெஹிவளை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்ஜீவ் - உன்னா (கனடா), சிவானி - ராயன் (அமெரிக்கா), ஜானகி - ரீட்டா (அமெரிக்கா), கஜன்  - பிருந்தா (இலண்டன்), ஜெகன் - ரம்யா (இலண்டன்), ராம் (இலண்டன்), சாய்லக்ஷ்மி (தெஹிவளை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிரியா, மீரா, கிரேஷன், ஸ்கைலர், ஆதிரா, ரியா, வீரா, தாரகை, ரிஸ்ரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-11-2025 புதன்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2025 00:00)