திருமதி. மாணிக்கம் அன்னம்மா (பரிமளம்)
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
தோற்றம்: 25 பெப்ரவரி 1936 - மறைவு: 25 டிசம்பர் 2024
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும், தற்போது நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாணிக்கம் அன்னம்மா அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை - தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகலாநிதி (ஓய்வுபெற்ற கிராம அலுவலர்), கிருஷ்ணதயாநிதி (ஓய்வுபெற்ற சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), காலஞ்சென்ற உதயகுமார், ரமேஸ்குமார் (கனடா) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற நாகேந்திரநாதன், சத்தியலோகன், மேனகா (கனடா) ஆகியோரின் மாமியாரும்,
கோபிகன் (கனடா), சாகித்தியன் (கனடா), சயிலுயா (சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, பரமேஸ்வரி, சுப்பிரமணியம், லக்ஷ்மி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
