Mr Manickam Nedumaran
Deceased: 01 October 2026
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களின் மகன் திரு. மாணிக்கம் நெடுமாறன் (57) அவர்கள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் (அக்டோபர் 1, 2026) காலை இந்திய நேரம் 8.45 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு. மாணிக்கம் நெடுமாறன் அவர்கள் பல ஆண்டுகளாக மெல்பர்ன் நகரில் பணிபுரிந்து வந்தார். அவர் புத்த மதத்தைத் தழுவி புத்தத் துறவியாக வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு மாத காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவர் இயற்கை எய்தினார்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் புத்த மதப்படி மெல்பர்ன் நகரிலேயே நடைபெறும்.
தகவல் :- தமிழ் அவுஸ்ரேலியா
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2026 04:59)
