திரு மாணிக்கம் சிவபாதம்

(L.L.B, M.Phil இலங்கை, இளைப்பாறிய சிரேஸ்ட சட்ட விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைக்கழகம்,J/Hartley College, Point Pedro- பழைய மாணவர்)

மாணிக்கம் சிவபாதம்

தோற்றம்: 22 மார்ச் 1952 - மறைவு: 25 நவம்பர் 2020

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாவும், கொழும்பு, கனடா, மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவபாதம் அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் மாணிக்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து விஸ்வலிங்கம் சின்னத்தம்பி பூபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரமணி(இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதிபதி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
மொஹான் சுஜீவ்(Actuary- கனடா) அவர்களின் அருமைத் தந்தையும்,
 
வல்லிபுரம், பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், அமிர்தாம்பிகை, தங்கவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
பார்த்தீபன், நித்யா, பிரதீபா, திவாஹர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
திலக்‌ஷன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2020 புதன்கிழமை அன்று கரவெட்டியில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- மொஹான் சுஜீவ் சிவபாதம்(மகன்)
 
தொடர்புகளுக்கு:-
 
அற்பதராஜ் விஸ்வலிங்கம் - மைத்துனர் Mobile : +1 289 304 9489  Mobile : +1 226 808 4049  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2020 04:37)