திரு. மாணிக்கவேல் மகேந்திரன் (ஜக்கடயா [வரதன்])

மாணிக்கவேல் மகேந்திரன் (ஜக்கடயா [வரதன்])

தோற்றம்: 03 ஏப்ரல் 1961 - மறைவு: 03 ஜூலை 2026

திருகோணமலை - பத்தாம்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வீரநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மாணிக்கவேல் மகேந்திரன் அவர்கள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவேல் - உகந்தநாயகம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான நடராசா - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷிந்தன், துசாந்தினி, பாரத், சாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜீவஜோதி, யூட்ஸ் கலிஸ்ரன், பிருந்தினி, மோகனகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரித்திஷா, பிரனாலினி, சர்விதா, அற்விக், அஸ்வந்த், லோகித், தேஜஸ்வின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சாந்தா, கஜேந்திரன் (கஜே), ஜீவா, ராஜேந்திரன் (சாச்சப்பா), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் (பாலு), சுகுணா, சின்னவன், காலஞ்சென்ற ராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்

அன்னாரின் திருவுடல் 04-07-2026 சனிக்கிழமை அன்று மாலை 04-00 மணியளவில் இல- 336, வீரநகரில் உள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து திருக்கோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 76 4776 969

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2026 00:00)