திரு. மாணிக்கம் கணேஸ்
(ஓய்வுபெற்ற நூலக உதவியாளர், பொதுசன நூலகம், சங்கானை.முன்னாள் பட்டினசபை உறுப்பினர், வலிமேற்கு பிரதேச சபை)
மறைவு: 29 ஆகஸ்ட் 2025
யாழ்.சங்கானை நிற்சாமமைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் கணேஸ் அவர்கள் 29-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம்-சின்னக்குட்டி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வைரவன் - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, இராசம்மா, மீனாட்சிபிள்ளை, கிளியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
வதனமாலா, காலஞ்சென்ற ரமேஸ், சித்திரமாலா (ஜேர்மனி), விஜயமாலா, சத்தியமாலா (ஆசிரியை - சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயம்), சுரேஸ்பாபா (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயநேச ரூபன் (ரவி), மோகன் (ஜேர்மனி), வேலாயுதம், சந்திரசேனா (விரிவுரையாளர்-வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமானாரும்,
ருகன்சிகா (ஜேர்மனி), டக்சிகா, டிதன் (ஜேர்மனி), நிரஞ்சிகா, டினேஸ் (ஜேர்மனி), லதுஷன், அஸ்மிதன், லினுஜன், அனோசிகா, டிலக்ஷா, ஹபிஷஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் மாளிகாவத்தை வீதி, நிற்சாமம், சங்கானையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் விளாவெளி இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
முகவரி:-
மாளிகாவத்தை வீதி,
நிற்சாமம், சங்கனை.
www.tamilthakaval.org
