(29-03-2026, 10:00 am Australia Time)

திருமதி. மஞ்சுளா பாலசுப்ரமணியம்

மஞ்சுளா பாலசுப்ரமணியம்

தோற்றம்: 04 பெப்ரவரி 1953 - மறைவு: 25 மார்ச் 2026

யாழ். காட்டுவளவு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், Toronto - கனடா மற்றும் Melbourne - அவுஸ்திரேலயா ஆகிய இடங்களை வாழ்விடங்களாக கொண்டிருந்த திருமதி. மஞ்சுளா பாலசுப்ரமணியம் அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று  Melbourne இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் (KK Bala Lawyer) - பார்வதியம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - இராசரெத்தினம் தம்பதியினரின் மதிப்புமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

லாவண்யாவின் பாசமிகு தாயாரும்,

அரவிந்தனின் மதிப்புமிகு மாமியாரும்,

கௌதம், பாவனா ஆகியோரின் பாசமிகு அம்மாச்சியும்,

ராஜலிங்கம் (மாஸ்டர்) - சுசிலா ஆகியோரின் மதிப்புமிகு சம்பந்தியும்,

காலஞ்சென்றவர்களான நிர்மலா, குமாரசிறீதரன் (சிறி மாஸ்டர்), குமாரகுருபரன் (குரு) மற்றும் சியாமளா, சுசிலா, சாரதா (செல்வி) ஆகியோரின் அன்புச்சகோதரியும், 

காலஞ்சென்ற Dr.சத்தியசீலன், தனலக்ஷ்மி (கௌரி Teacher), நீல் சுரேந்திரன், சண்முகவரதன், அருணாசலம் ஆகியோரின் மதிப்புமிகு மச்சாளும்,

நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன், வாணி (Tiffany) ஆகியோரின் சின்னம்மாவும்,

முகுந்தன், வசந்தன், பிரபு ஆகியோரின் மாமியும்,

நிவேதனன் (ஜலக்), நிர்மலன், கதாகரன் ஆகியோரின் பெரியம்மாவும்,

அன்னார், பரமானந்தவேல், காலஞ்சென்ற மயிலேறும்பெருமாள் (சண்டி அண்ணா) மற்றும் நித்தியானந்தவேல், சத்தியானந்தவேல், தெய்வக்கனி, கிருஷ்ணகுமரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தனலட்சுமி, கோமளாதேவி, காலஞ்சென்ற வனிதா, ஹசந்தி, தர்மகுலசிங்கம்காசிலிங்கம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

ராதாராம், கவிதா, ஸ்ரீதேவி, கௌரி, மீரா ஆகியோரின் சித்தியும்,

மயூரி, தினேஷ் ஆகியோரின் பெரியம்மாவும்,

ராகுலன், ரதினி, கண்ணன், திவாகரன், மனோஜ்கிரண் ஆகியோரின் மாமியும் ஆவார்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் Joyce Chapel, Fawkner Memorial Park இல் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2026 00:00)