Mrs. Mankaiyatgarasi Velluppillai

(Retired Teacher)

Mankaiyatgarasi Velluppillai

Deceased: 07 November 2024

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையர்கரசி வேலுப்பிள்ளை அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி (மாப்பாணர்-ஆசிரியர்) அவர்களின் ஆரூயிர்த் துணைவியாரும்,

காலஞ்சென்ற முருகையா (அரச பணியாளர்),  கைலாசபதி (ஓய்வு நிலை பிரிதி வரி மதிப்பாளர் நாயகம்),  மங்களேஸ்வரி வேலுப்பிள்ளை (ஓய்வுநிலை ஆசிரியை), மனோன்மணி பூபாலசிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாநிதி முத்துவேல் (பேராசிரியர்-அமெரிக்கா),  கலாநிதி செல்வவேல் (ஆலோசகர்- அமெரிக்கா), முருகவேல் (ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிக்காளர்- கிளிநொச்சி), கதிரவேல் (இலண்டன்), தெய்வராணி செல்வநாதன், செல்வராணி சின்னையா (ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும், 

செல்வநாதன் (நீர் வடிகாலமைப்பு சபை), சின்னையா (ஓய்வுநிலை ஆசிரியை- திருகோணமலை), ரோகிணி, சுசீலாதேவி, அனுசா, சிவமதி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-11-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் இடைக்காட்டில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2024 22:18)