Mrs. Manonmani Canagarajah
Date of Birth: 28 May 1955 - Deceased: 20 July 2024
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி கனகராஜா அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சிவகாமி தம்பதியினரின் அன்பு மகளும்,
கனகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரொஷானி அவர்களின் பாசமிகு தாயாரும்,
பாக்கியலட்சுமி (ஜேர்மனி), கோபாலபிள்ளை (வவுனியா), புவனேஸ்வரி (வவுனியா), காலஞ்சென்ற ஞானசம்பந்தன், மாணிக்கவாசகர் (ஜேர்மனி), மங்கயற்கரசி (ஜேர்மனி), திலகவதி (கனடா), காந்திமதி (கனடா), காலஞ்சென்ற செல்வமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7.00 மணி முதல் 10.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 22-07-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் இறுதிக்கிரயைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
