திருமதி. மனோன்மணி கந்தசாமி

(இளைப்பாறிய ஆசிரியை, உப அதிபர் மங்கையற்கரசி மகாவித்தியாலயம் நல்லூர்)

மனோன்மணி கந்தசாமி

தோற்றம்: 04 மே 1932 - மறைவு: 10 மே 2024

யாழ். நயினாதீவு 4 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வளாக ஒழுங்கை திருநெல்வேலி, Scarborough - கனடாவை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி கந்தசாமி அவர்கள் 10-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென் நாகலிங்கம் - இலட்சுமிப்பிள்ளை (நயினாதீவு) தம்பதியினரின் அன்புப் புதல்வியும், 

காலஞ்சென்ற செல்லப்பா கந்தசாமி (முன்னாள் சீமெந்து கூட்டுத்தாபன பிரதம கணக்காளர் - காங்கேசன்துறை) அவர்களின் அன்புத் துணைவியும்,

முகுந்தினி (கனடா), விமலினி (இத்தாலி), வசந்தபாலன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபானந்தன் (கனடா), ஞானசேகர் (இத்தாலி), சர்வனந்தனி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஷ்னுஷா, துர்க்கா, ராகவேந்தன், வைஷ்ணவி, பானுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் (இளைப்பாறிய அதிபர் - புங்குடுதீவு), சிவமணி (இளைப்பாறிய ஆசிரியை), சதானந்தன் (இளைப்பாறிய கணக்காய்வு அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா (இளைப்பாறிய அதிபர் - புங்குடுதீவு), சண்முகரத்தினம் (இளைப்பாறிய பெருந்தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்), மகேஸ்வரி (இளைப்பாறிய அரச உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 13-05-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 14-05-2024  செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடந்து பிற்பகல் 2.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2024 04:00)