Mrs. Manonmani Pasupathy

Manonmani Pasupathy

Date of Birth: 09 October 1943 - Deceased: 12 April 2026

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி பசுபதி அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசு - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கதிரேசு பசுபதி அவர்களின் அன்பு மனைவியும்,

பாமதி, ரூபன், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீதரன், ரஜீனா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, தம்பிராசா, இராசம்மா, நடராசா, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கமுத்து அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கனகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவலிங்கம், பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலீபன், ஹரிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-04-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 - 5:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2026 00:00)