Mrs Manonmani Sellathurai

Manonmani Sellathurai

Date of Birth: 05 December 1936 - Deceased: 03 May 2024

கம்பஹா மீரிகமைவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 3ம் வட்டாரம், திருகோணமலை ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி செல்லத்துரை அவர்கள் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசிவம் - தையலம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தையலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற Dr. கந்தையா செல்லத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
 
செல்வச்சந்திரன், செல்வராணி, புஸ்பராணி (ஓய்வு நிலை ஆசிரியை - விஞ்ஞானம்), மோகனச்சந்திரன், ரவிச்சந்திரன், உதயராணி (ஆசிரியை - பாலம்போட்டாறு சித்தி வி.வி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சுவந்தினி, சிவானந்தன், விமலகுமாரன் (ஓய்வுபெற்ற ஊழியர் - ப.நோ.கூ. சங்கம்), சிவப்பிரியா, ஐங்கரன் (பிரதேச செயலகம் - தம்பலகாமம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பார்வதி, மார்க்கண்டு, அருளம்பலம் மற்றும் கங்காதரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான புஸ்பமணி, சுப்பிரமணியம், மனோன்மணி, கனகாம்பிகை மற்றும் திருப்பதி, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
செந்தூரி, காலஞ்சென்ற ஹரீஸ், குகேஷ், ருக்‌ஷா, ஜனுஜா, கார்த்திக், லதுசன், ஷாருகேஷ், ஷஹானன், பிருத்விகா, ஆர்த்தி, மித்ரா, ரிஷிகரன், மதுஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருகோணமலை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2024 04:00)