திருமதி. மனோன்மணி தர்மலிங்கம்
தோற்றம்: 15 செப்டம்பர் 1938 - மறைவு: 15 மே 2025
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், மன்னார் மாளிகைத்திடல் சேற்றுக்குளம், கனடா - Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி தர்மலிங்கம் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் (முன்னாள் கிராமசபை உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான லோகேஷ்வரன், தமிழ்செல்வி மற்றும் இலங்கேஷ்வரன், அருட்செல்வி, மோகனா, கிருபாகரன், தயாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயானி, அகஸ்ரின், யூலியஸ், சுதர்ஷினி, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பவானி கந்தசாமி, தியாகராஜா, சண்முகராஜா, கனகசுந்தரம், கனகமணி குமாரசாமி மற்றும் பவளம்மா சதாசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஐசாக், யோசுவா, மைத்ரேயி, அக்சானா ஆர்திக், ஆரோன், ஆரபி, அபிஷேக், பிரீத்தன், கிஷான், சாருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18 -05- 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 19-05-2025 திங்கட்கிழமை 9:00 - 10:00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
