திருமதி. மரகதம்பிள்ளை பராசக்தி
தோற்றம்: 20 நவம்பர் 1930 - மறைவு: 27 ஜனவரி 2026
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மரகதம்பிள்ளை பராசக்தி அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் ஐக்கியம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
நாகநாதர் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மரகதம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
குருமூர்த்தி சாஸ்த்திரியார் அவர்களின் பேத்தியும்,
தனபால் (Paster- கனடா), குகபாலன் (Kids World- கனடா), விஜயராணி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நகுலாம்பிகை, சித்திராதேவி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி (ஆசிரியர்), கனகசபாபதி, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருமேனி (ஆசிரியர்), செல்லத்துரை (Jaffna Central Cafe), அமிர்தம்மா, விஸ்வலிங்கம், சந்தரம்பிள்ளை, நடராசா, கனகம்மா, இரத்தினம் மற்றும் பரமேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Ruth, Daniel- Flavia, Rebecca – Benson, Kirrthy, Revathi – Franklin, Naventhan- Niluksha, Sahini- Gowshan, Yamini, Shadhana ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Jonathan, Davidson, Christa, Rehma, Nikita, Dinuush ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-01-2026 வெள்ளிக்கிழமை மாலை 6:00 - 9:00 மணிவரையும், 31-01-2026 சனிக்கிழமையும் காலை 8:00 - 9:30 மணி வரையும் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Duffin Meadows Cemetery (2505 Brock Rd N, Pickering, ON L1X 0K3, Canada) நல்லடகம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
