Mrs. Maragathavalli Rathnam

Maragathavalli Rathnam

Date of Birth: 14 October 1925 - Deceased: 21 August 2024

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மரகதவல்லி இரத்தினம் அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தயாபரன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), இரத்தினேஸ்வரி, இரத்தினேஸ்வரன், ரஞ்சினி, ராஜினி, ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பவானி, கமலநாயகி, வேல்விழி, ஜெகநாதன், ஶ்ரீபாலகாந்தன் (கனடா), குகநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இராலெட்சுமி, நவரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விஜயலட்சுமி, லிங்கபிள்ளை, சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், குருசாமி, கண்ணம்மா, நடராஜா, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திவ்யா, ஜீவகன், சிந்துஜன், நிவேதன், கிரிசன், மகிசன், நிஷானா, நிதன் ஆகியோரின் அன்பு பேத்தியும், 

கேதனின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 22-08-2024 வியாழக்கிமை முதல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:-

11/51, பரகும்பா பிளேஸ்,

வௌ்ளவத்தை, கொழும்பு-06.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2024 04:00)