Mrs. Marimuthu Gunamani
Deceased: 24 June 2025
யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமியை வாழ்விடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாரிமுத்து குணமணி அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. சிற்றம்பலம் சுப்பிரமணியம் - பார்பதிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், திரு.திருமதி. சிவகுரு தம்பதியினரின் (காரைநகர்) மருமகளும்,
முதலியார் தியாகராசா, புஷ்பராஜா, பற்குணராஜா, மகேந்திரராசா, மனோகரராசா, இரவீந்திரமணி, சிவானந்தராசா ஆகியோரின் சகோதரியும்,
மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரியாம்பாள், சேதுகாவலன், வேலாயுதம், ஜெகா, காலஞ்சென்ற தங்கா, மாமணி, பானுமதி ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தகனக்கிரியைகள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
