திருமதி. மாரிமுத்து புஸ்பலீலா (சரஸ் அக்கா)

மாரிமுத்து புஸ்பலீலா (சரஸ் அக்கா)

தோற்றம்: 23 ஜூன் 1950 - மறைவு: 25 மார்ச் 2025

மாத்தளை - இறத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், இல-82, கருணைபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாரிமுத்து புஸ்பலீலா அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  செல்லையா - மீனாம்பாள் தம்பதியினரின் மகளும், 

காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தராஜ், தினேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தங்கப்பிள்ளை - தங்கராசா, காலஞ்சென்ற இராமையா - வரதம்மா  ஆகியோரின் சம்மந்தியும்,

இந்திராணி, கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மகேந்திரன், குமேந்திரன், சித்திரா, ராஜலெட்சுமி, கனகசுந்தரி (மஞ்சு), தனலெட்சுமி (தனா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரா, இராஜலிங்கம், கெவிஸ்டர் ஜோசப், தர்மராஜா ஆகியோரின் மைத்துனரும்,

முகிலன், கரண், தரண், வருதேஸ், கிசோதா, கோகிலப்பிரியன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை அன்று காலை நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் வாழைச்சேனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2025 04:00)