Mr Mariyampillai Perinpanathan
Deceased: 13 September 2019
உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை பேரின்பநாதன் கடந்த (13.09.2019) வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மரியாம்பிள்ளை - நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணியின் பாசமிகு கணவரும்,
பத்திநாதன், அல்வீனம்மா காலஞ்சென்ற சோதிநாதன் மற்றும் அம்லோற்பவம், அருட்பணி போல் நட்சத்திரம் (அ.ம.தி), எலிசபேத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரீனா (முகாமைத்துவ உதவியாளர் - குடிவரவு குடியகல்வு திணைக்களம் - கொழும்பு), மரியகாந்தி (ஆதார வைத்தியசாலை-தெல்லிப்பளை), மரியதயானி, நவஜீவா (பிராந்திய முகாமையாளர் - டயலொக்), றொசான் (இ.போ.ச) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கராசா (உப பதிவாளர் மாவட்ட நீதிமன்றம் - கொழும்பு), பீற்றர் யூலியன் (சந்திரன்), வொட்கின்சன் (தேசிய சமாதானப் பேரவை - கொழும்பு), சுலக்ஷனா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - சிறுவர் பராமரிப்பு மற்றும் சேவைகள் திணைக்களம் - நீதிமன்ற அலகு, யாழ்ப்பாணம்), நிரோசா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வலயக்கல்வி அலுவலகம் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமனாரும்,
ஆன்கிறிஸ்ரலா, மக்ஷலோ, எரின் புளோறா, செரபியா, கென்றிக்சன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று (16.09.2019) திங்கட் கிழமை பி.ப 3.00 மணிக்கு உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உரும்பிராய் புனித மிக்கேல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், குருக்கள், துறவிகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்.
தகவல் : குடும்பத்தினர்
'+94 77 333 7749, +94 77 262 7903
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2019 01:03)
