Mrs. Mariyanayagam Regina Pakkiyamani
Date of Birth: 07 May 1931 - Deceased: 21 April 2025
முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், Brampton - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மரியநாயகம் றெஜீனா பாக்கியமணி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை றிச்சாட் - மாக்கிறேற் செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யாக்கோப்பிள்ளை - வரோனிக்கா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யாக்கோப்பிள்ளை மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற டெய்சிராணி, சிறிதரன், லெஸ்லி, கிங்ஸ்லி, பிறின்ஸிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மரியநாயகம், மரியவதனி, ராஜசிறி, தயானி, தயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான யோசப் ராசநாயகம், மேரி ராசமணி, லீனாப்பிள்ளை, செல்வமணி மற்றும் அன்னமணி இரத்தினம், காலஞ்சென்ற அக்கினேஸ் நேசமணி, ராக்கினியம்மா (தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோனா குணமணி, ஆசீர்வாதம், பேனாடியஸ், காலஞ்சென்றவர்களான துரைசாமி, செலஸ்ரின் மற்றும் வின்சன் றெஜீனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிருந்தாபன், யான்ஸி, பிலிப்குமார், துளசிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்
நிக்சன், நோயல், நோறா, ரெசா (Tessa), ஜெனிவர், விஸ்ணுவாசன், அஸ்வினி, ஜொய்லின் (Joylen) கிறிஸ்ரன், றொய்ஸ்ரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
மித்ரா, வருண், துருவ், நியாரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-04-2025 வெள்ளிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 26-04-2025 சனிக்கிழமை காலை8 :00 - 9:15 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11:45 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
