திருமதி. மரியநாயகி சேவியர் (நவம்)

மரியநாயகி சேவியர் (நவம்)

தோற்றம்: 23 ஏப்ரல் 1948 - மறைவு: 13 ஆகஸ்ட் 2024

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இரட்மலானை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மரியநாயகி சேவியர் அவர்கள் 13-08-2024 செவ்வாய்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனி குரூஸ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி. ஜோலன்ட் செறினா, காலஞ்சென்ற ஜெவ்றி பிரசாத் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சமிந்த வீரசிங்க அவர்களின் பாசமிகு மாமியாரும்,

செனோறி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 14-08-2024 புதன்கிழமை காலை 8:30 மணியிலிருந்து பிற்பகல். 3:30 மணி வரை, Western Florist, 109 Negombo - Colombo Main Rd, Negombo இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதி ஆராதனைக்காக குடாப்பாடு புனித செபமாலை மாதா ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2024 04:00)