திரு. மாரியாபிள்ளை சிவலிங்கம்
தோற்றம்: 07 ஏப்ரல் 1954 - மறைவு: 15 மே 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தை பூர்வமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரியாபிள்ளை சிவலிங்கம் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இரவு 8:10 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரியாபிள்ளை - ராசாத்தி அம்மாள் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தர்மலிங்கபிள்ளை (பண்டாரவளை) - ஜெயலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற தர்மாம்பாள் (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
விதுசி, அதித்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அணில்மோகனின் மாமனாரும்,
தர்மராணி (மாலா - மைத்துனி), விஸ்வநாதன் அவர்களின் சகலையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-05-2025 காலை 7:30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
