Mrs. Mariyathasan Usharani
Date of Birth: 29 August 1957 - Deceased: 17 November 2026
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் நாட்டின் - Quincy-sous-Sénart னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மரியதாசன் உஷாராணி அவர்கள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு குருநாதர் - தம்பித்தவமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு வைத்தியம்பிள்ளை - கிறிஸ்தோபிள்ளை மரியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மரியதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரெமிஜியஸ், டெனிசன், டெல்பின், எவ்லின் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் Maison Funéraire Méditerranée (21 Rue Elsa Triolet, 77176 Savigny-le-Temple, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் Eglise Sainte Croix (2 Rue de l’Église, 91480 Quincy-sous-Sénart, France) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மாலை 4:15 மணியளவில் சரீரம் Cimetière de Quincy-sous-Sénart (57 Rue de Boissy-Saint-Léger, 91480 Quincy-sous-Sénart, France) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
டெனிசன் (மகன்):- +33 666 598 016
இராசலிங்கம் ரஜீவரன் (மகன்):- +33 778 104 368
www.tamilthakaval.org
