(09-01-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் - SL Time)

Mr. Markandu Balasubramaniam

(முன்னாள் அக்கராயன் ப.நோ.கூ.சங்க முகாமையாளர், சமாதான நீதவான்)

Markandu Balasubramaniam

Date of Birth: 11 February 1962 - Deceased: 07 January 2026

யாழ். சாவகச்சேரி தனங்களப்பைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, யோகபுரம், கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம்,  கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்கண்டு பாலசுப்பிரமணியம் அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்கண்டு - விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மகனும், 

சின்னத்தம்பி - தங்கமுத்து தம்பதியிரின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற ஞானசூரி அவர்களின் அன்புக் கணவரும்

திலகவதி அவர்களின் பாசமிகு சகோதரனும்,

பாலரூபினி (காயத்திரி ஹாட்வெயர்-காரைநகர்), ஐங்கரன் (நெதர்லாந்து), சசிஜகரன் (ஸ்கந்தபுரம்), சஜிதா (பரந்தன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகனராசா (இலங்கை மின்சாரசபை, வட்டுக்கோட்டை), டயாலினி (நெதர்லாந்து), ஜெசோ (ஸ்கந்தபுரம்), சீவகன் (ஸ்ரீலங்கா ரெலிகொம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனுஜன், லிதுஜன், திபானுஜன், சுருதி, ஆதி, அஸ்வின், கம்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-01-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கண்ணகபுரம் இந்து மயானத்தில் தனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- ச.மோகராசா (மருமகன்)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2026 23:10)