திருமதி. மார்க்கண்டு ஜெயலட்சுமி

மார்க்கண்டு ஜெயலட்சுமி

தோற்றம்: 31 மார்ச் 1949 - மறைவு: 20 பெப்ரவரி 2025

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மார்க்கண்டு ஜெயலட்சுமி 20-02-2025 வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜசிங்கம் - மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயமாலினி, கிருஷ்ணகுமார், ஜெயசுபாஜினி, ஜெயசுபாகர் (இலண்டன்), விஜேந்திரவாசன் (குட்டி), சசிகலாதேவி, கிருஷ்ணலீலா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயானந்தராசா, சிவனேஸ்வரி, நந்தகுமார், சயிதா (இலண்டன்), மேகலா (கனடா), இளமுருகன், மயூரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தங்கராசா, துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யுகர்ணியா, கரிகரன், தனுஷ்கா, ஹரிஸ், டிபிகன், நேருஷன், ஹானுசன், சுவர்ணாங்கி, விகாஷ், ஆருஷ், ரித்திஷ், கனிவளவன், ரிஷிகேஷ், தர்மிகன், இளநிலா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக 20-02-2025 வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 21-02-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2025 05:00)