Mrs. Markandu Manonmani
Date of Birth: 24 November 1951 - Deceased: 21 March 2024
யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மார்க்கண்டு மனோன்மணி அவர்கள் 21-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரன் - வள்ளியம்மை தம்பதியினரின் ஏக புத்திரியும்,
மட்டுவிலைச் சேர்ந்த ஒப்பர் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு (சித்திரக் கலைஞர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அம்பலம் (ஓய்வு பெற்ற பொறியியலாளர் - கொடிகாமம்), குமரவேலு (ஓய்வு பெற்ற தபாலதிபர் - சித்தன்கேணி), பழனிமலை (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, பாலேந்திரா சரஸ்வதி, நாரயணன் வரதலட்சுமி (ஆசிரியை) மற்றும் நாரயணன் குகநேசன் (ஓய்வு நிலை தபாலதிபர், விவாகப்பதிவாளர் -நல்லூர்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
திருமதி சோமவதி அம்பலம் (ஓய்வு நிலை ஆசிரியை - கொடிகாமம்), திருமதி சற்குணதேவி குமாரவேலு (ஓய்வு நிலை ஆசிரியை - சித்தன்கேணி), திருமதி லக்ஷி பழனிமலை (அவுஸ்திரேலியா), திருமதி சௌந்தரராணி குகநேசன் (ஓய்வு நிலை ஆசிரியை - நல்லூர்), காலஞ்சென்றவர்களான நாகேசு, சீதை, கனகம்மா, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கிருஸ்ணகோபி (பரீட்சைத் திணைக்களம் - கொழும்பு), டிலானி அம்பலம் (முகாமைத்துவம் - கொழும்பு கச்சேரி), வைத்தியக்கலாநிதி லவண்யா பழனிமலை (அவுஸ்திரேலியா), குகநேசன் அபிராம் (மாணவன் - யாழ் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
