திரு. மார்க்கண்டு பொன்னம்பலம்
தோற்றம்: 20 ஆகஸ்ட் 1957 - மறைவு: 20 ஜூலை 2024
யாழ். காரைநகர் முல்லைப்பிளவை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு பொன்னம்பலம் அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜித்தா (லண்டன்), சாரதா (ஜேர்மன்), வனிதா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் - அட்டாளைச்சேனை), அம்பிகா (கொமர்ஷல் வங்கி-கொட்டாஞ்சேனை), வித்தியா (தாதி உத்தியோகத்தர்-திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
தரஷ்கானந் (லண்டன்), கேதீஸ்வரன் (ஜேர்மன்), முரளிதரன் (ஆசிரியர்- க.மு விபுலானந்தா தேசிய பாடசாலை, காரைதீவு), புவனேந்திரன் (கொமர்ஷல் வங்கி), சஜீபன் (தாதி உத்தியோகத்தர்- திருகோணமலை), தர்ஷன் (லண்டன் ), கபிசன் (லண்டன்), கனிஸ்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாஸ்கரன் (லண்டன்), சத்தியநாதன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக திருகோணமலை இந்து மையானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
