Mr. Markandu Ramanathan

(Manoj Hardware- கிளிநொச்சி)

Markandu Ramanathan

Date of Birth: 12 January 1938 - Deceased: 28 November 2024

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு இராமநாதன் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-சுந்தரமால் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

சந்தானெலட்சுமி அவர்களின் பாசமிகு தந்தையும்,

மனோகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

தமிழேந்தி (பிரித்தானியா), ஜெயவாகினி (பிரித்தானியா), கஜரூபன் (பிரித்தானியா), லாவண்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற அன்னம்மா, பாக்கியம், பாலசுப்பிரமணியம், மயில்வாகனம் (மார்கண்டு & சன்ஸ்-கலேவல), செல்லம்மா, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்   .

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

 வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2024 05:00)