திரு. மார்க்கண்டன் சின்னத்தம்பி

மார்க்கண்டன் சின்னத்தம்பி

மறைவு: 08 நவம்பர் 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Ottawa, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டன் சின்னத்தம்பி 08-11-2025 அவர்கள் சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பாலதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற செல்வராணி, சிவாநந்தன், காலஞ்சென்ற விஜயகுமார், நகுலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ருக்‌ஷினி, தர்ஷி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷ்ணானந்தன், அகிலன், நிரூஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைஷாலி, சஞ்சீவ், அக்‌ஷே, ஆஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான Dr.சிவராமலிங்கம், சுபத்ராதேவி மற்றும் சாரதாதேவி, சகுந்தலாதேவி, ரமணி, Dr.கணேசமூர்த்தி, காலஞ்சென்ற விஜயதேவி, விஜயகுமார், இந்திராதேவி, கங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 - 11:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2025 00:00)