Mr Markandu Sivasubramaniam
(Retired Teacher Jaffna Kokuvil Hindu College)
Date of Birth: 20 November 1942 - Deceased: 12 June 2024
யாழ் சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் யாழ் கொக்குவில் இநதுக் கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியர் திரு மார்க்ண்டு சிவசுப்பிரமணியம் அவர்கள் நேற்று 12-06-2024ம் திகதி புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான மந்தையா நாகரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தில்லைநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவநேசன்(உதவி ஆணையாளர் உள்நாட்டு இறைவரி திணைக்களம் கொழும்பு), சிவசங்கர்(விரிவுரையாளர் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் கொழும்பு), சிவதர்சினி(பொருளாதார அபிவிருத்தி உத்தியோக்தர் திட்டமிடல் கிளை மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜந்தினி( Quantity Surveyor கொழும்பு), நியோமி(கொமர்ஷல் வங்கி, கொழும்பு), பிரிபாகரமூர்த்தி(பிரதேச செயலர் மருதங்கேணி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கலைமகள்(கனடா), பாலசுப்பிரமணியம், கைலாசபதி, காலஞ்சென்ற நாமகள் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பவகரன், பவநிதா, அகரன், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞசென்ற விஜயநாதன் மற்றும் சபாநாதன், காலஞ்சென்ற லோகநாயகி சுந்தரலிங்கம் மற்றும் திருமங்கலநாயகி, காலஞ்சென்ற செல்வநாயகி மற்றும் ஞானதேவன்(பின்லாந்து) மற்றும் காலஞ்சென்ற இராஜநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 13-06-2024ம் திகதி வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கரியைக்காக முன்பகல் 11:00 மணியளவில் கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
271/ 6, நாவலர் ஒழுங்கை
ஆனைப்பந்தி,
யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2024 19:36)
