Mrs. Markgrat Gnanapragasam (Sellamma)
Date of Birth: 15 June 1941 - Deceased: 22 November 2025
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், நெதர்லாந்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாகிறேற் ஞானப்பிரகாசம் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தொம்மை - ஆரோக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தோமிஸ் - லூசாசி தம்பதியினரின் அன்பு மருமளும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அமிர்தநாயகம் மரியதாஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,
அனுரா (இலண்டன்),
செல்வம் (ஜெரா - டென்மார்க்), ரெமி (ஜேர்மனி), நதியா (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
தேவிகா, சிபோ, தபோ, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாரகன், சுபேரகன், சமீனா, லக்ஷன், ஸ்ரினா, பபியன், எபியன், ரபியா, லிஷானி, லெயானா, லெஷ்வென் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாறனின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:45 - 11:15 மணி வரை Karel Boddenweg-5, 5044EL Tilbrug இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் Lagewitsiebaan-91, 5024DH, Tilbrug இல் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் Karel Boddenweg-5, 5044EL Tilbrug இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
