பேராசிாியா். மார்க்கண்டு கருணாநிதி

மார்க்கண்டு கருணாநிதி

தோற்றம்: 28 ஏப்ரல் 1949 - மறைவு: 21 டிசம்பர் 2025

யாழ். அல்வாய் தெற்கு கொக்கட்டியாவளவினைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 15, விஸ்வைக் தொடர்மாடியை வசிப்பிடமாகவும், தற்போது வதிரி பிரசாந்தியில் வசித்தவருமான திரு. மார்க்கண்டு கருணாநிதி அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி - நவரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சகுந்தலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரசாந்தன் (கனடா), நிவேதித்தன் (இங்கிலாந்து), காயத்திரி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

காலஞ்சென்ற மகாமலர் கிருஸ்ணபிள்ளை, கருணாவதி தணிகாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற கவிஞர் மு. செல்லையாவின் தந்தைவழி மருமகனும்,

காலஞ்சென்ற வடிவேலுவின் (அருந்துரை) தாய்வழி மருமகனும்,

சோபிதா (கனடா), மாதங்கி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்ற இராஜநாதன், சித்தரஞ்சன், கௌசல்யா (இலண்டன்), ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,ஹர்சவி, சஸ்வின், வருண், யாத்ரா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னராின் இறுதிக்கிரியைகள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது வதிரி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2025 00:00)