திரு மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன்

(ஓய்வு பெற்ற பிரதம ஆசிரியர் உதயன்-சஞ்சீவி மற்றும் காலைக்கதிர் பத்திரிகைகள்)

மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன்

தோற்றம்: 25 ஜூலை 1942 - மறைவு: 22 நவம்பர் 2021


யாழ் வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,யாழ் நாவலர் வீதி நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட  உதயன்-சஞ்சீவி மற்றும் காலைக்கதிர் பத்திரிகைகளின் ஓய்வு பெற்ற பிரதம ஆசிரியர் மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் அவர்கள் 22-11-2021ம் திகதி திங்கட்கிழமை இன்று அதிகாலை மாவை கந்தனடி எயுதினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மருதப்பு-செல்லம் தம்பதிகள், சண்முகம்-அரியகுட்டி தம்பதிகளின் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்-வள்ளியம்மை ம்பதிகளின் தவப்புதல்வனும்,
 
காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு-மெல்லியம்மா தம்பதிகளின் மருமகனும்,
 
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற விமலாதேவி மற்றும் பகீரதன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
தயாநாதன் (ஜேர்மனி) அவர்களின் அன்பு மைத்துனரும்,
 
லோகதாசன், தருசினி, கதீஜா ஆகியோரின் தாய் மாமனும், வளர்ப்புத் தந்தையும்,
 
காயத்திரி, மணிவண்ணன், கோணேஸ்வரன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான அமரர, கஜீன்ந்த் மற்றும் சஞ்யிதா, கிசாந்த், சாகரி, சாரணி, மதுரிகா, லுயிசன், கபிசாந்த், தக்சினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்ற கண்மணி மற்றும் நவமணி, காலஞ்சென்ற பராசக்தி மற்றும் வைத்தியநாதன், காலஞ்சென்ற தேம்பாமலர் மற்றும் பத்மாவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-11-2021ம் திகதி செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில்  அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூவுடல் தகனக்கிரியைகளுக்காக யாழ்ப்பாணம் கோம்பையன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2021 07:16)