திருமதி. மேரி அலிஸ் பர்னாந்து
தோற்றம்: 02 மார்ச் 1929 - மறைவு: 02 ஆகஸ்ட் 2025
நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - ஆமர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி அலிஸ் பர்னாந்து அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. மார்க்கல் கிறிஸ்டியன் ஜோசப் தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற மைக்கல் சூசை மைக்கல் பர்னாந்து அவர்களின் அன்பு மனைவியும்,
ஜொசப்பின், ரீட்டா, ஆனந்தன், சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விஜயசிங்கம், வடிவேல், ராணி, பெனிட்டோ ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சரீரம் பொரளை பொது மயான கத்தோலிக்க பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
