Mrs. Mary Anjala Gunasegaram
(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை)
Deceased: 28 August 2026
மன்னார் - பெற்றாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மேரி அஞ்சலா குணசேகரம் அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுபிள்ளை - அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதன் - பொன்றோஸ் தம்ப தியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்ரன் ஆனந்த குணசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான எட்வேட் அரசசிங்கம், இந்திரா ஜோன்தாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கமலம், சௌந்தரி மற்றும் றீற்றா, அரியமலர், அருட்பணி ஜெயசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனற் சுகந்தி, கெனடி ஜோஸப், தாமரைச்செல்வன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செலஸ்ரின், ஆனந்த ராஜா, ஜொய்ஸ் ஷிரானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொஸ்வின் டுலாஞ்சலி, சுசான் சங்கவி, மைக்கல் நெவிந்தரா, மார்க் நரேந்திரா, ஷெரோன் தாரதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் புனித மரியன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட, சரீரம் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
