Mrs. Mary Jeyarani Gnanapragasam

Mary Jeyarani Gnanapragasam

Date of Birth: 27 March 1952 - Deceased: 15 September 2025

யாழ். சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி ஜெயராணி ஞானப்பிரகாசம் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செனட்டர் நல்லையா - மேரிமெக்ற்ரலின் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்ற நல்லையா அருளானந்தம் - மேரிபேர்ணடேற்  தம்பதியினரின் மருமகளும்,

அன்ரன் ஞானப்பிரகாசம் (இ.மி.ச மின் அத்தியட்சகர் ஓய்வுநிலை) அவர்களின் அன்பு மனைவியும்,

A.G.பிறிற்றோ வினோதன் (இலண்டன்), வேர்ஜினியா வினோதினி (இலங்கை வங்கி, கைதடி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெசிக்கா (இலண்டன்), துஸ்யந்தன் (முகாமையாளர் - சனச அபிவிருத்தி வங்கி, வவுனியா) ஆகியோரின் மாமியாரும்,

ஜெயதேவி (பவா), காலஞ்சென்றவர்களான ஜெயக்கொடி, ஜெயமலர் ஆகியோரின் சகோதரியும், எஸ்ரா, கஸ்பார், லூக்கா, மரியோன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-09-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 02.30 மணியளவில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் புனித மரியன்னை பேராலய துயிலும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:-

அருள் யோ றோஸ் வாசா
இல. 41, பழைய பூங்கா வீதி,
சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/09/2025 04:00)