Mrs. Mary Lilly Mariyanayagam

(முன்னாள் பலநோக்குக்கூட்டுறவுச் சங்க முகாமையாளர்)

Mary Lilly Mariyanayagam

Date of Birth: 01 May 1939 - Deceased: 19 January 2025

யாழ். சுண்டிக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி லில்லி மரியநாயகம் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தேவசகாயம் பிரான்சிஸ் மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சைலா வலன்ரையின் (ஜேர்மனி), கரோலின் சந்திரிகா (யெசி) விஜயசேகரன் (கனடா), அன்ரன் பிரெட்றிக் (ஜேர்மனி), யோசப் கப்ரல் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வலன்ரையின், விஜயசேகரன், சுதாகினி, மெலிற்றா றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரான்சிஸ் சேவியர், யூபிரேசியா சிங்கராயா (கிளி), காலஞ்சென்ற ஞானம்மா இம்மானுவேல், புஸ்பம் நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரெபான் கிலிவ், பேர்ஸ்ரின் ஓலாவ், பிறையன் ஜெவ், விதுஷன், ஷைராந்தி, பிறன்டன், சோபிதா, யூட் கர்சன், யூடின் கிறிசந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யஸ்பர், யேக்கப் யோர்டன், ஈலாய் ஜக்சன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-01-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 - 11:00 மணி வரை St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11:30 மணியளவில் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2025 05:00)