திருமதி. மேரி லூர்துமலர் சௌந்தரநாயகம்
மறைவு: 26 ஏப்ரல் 2026
யாழ். மாதகல் பற்றிமா வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. மேரி லூர்துமலர் சௌந்தரநாயகம் அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாகு - பிலோமினம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சௌந்தரநாயகத்தின் அன்பு மனைவியும்,
அன்று செல்வநாயகம் (கனடா), காலஞ்சென்றவர்களான ஜேற்றூட் ராணி, பேர்ணடேட் மணி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ஜிக்கி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ராஜா, காலஞ்சென்ற நிம்மி, கௌறி (அவுஸ்திரேலியா), வின்சி (நோர்வே), குமார் (பிரான்ஸ்), ஜோகா (பிரான்ஸ்), கீத்தா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரெலஸ்போர், மேனா, கென்றி, அலோசியஸ், உஷா, சுமதி, நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரல்ட், ஹென்றியேற்றா, கரிஷ், ஹென்றீனா, சில்வியா, சஞ்ஜே. அஷ்வின், அர்ச்சனா, அரிஸ்ரன், ஆர்த்தி, ஜோசவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஜே, ஜோர்டன், ஹெலேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-04-2026 புதன்கிழமை மாலை 6.00 மணி முதல் மாதகல் பிரதான வீதி 465 இலக்க இல்லத்தில் (முத்து கடையடி) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-04-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் வீட்டில் வழிபாடுகள் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் நடைபெறும் திருப்பலி வழிபாடுகளைத் தொடர்ந்து சரீரம் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
