திருமதி. மேரி நிக்கலஸ் அம்மாள் பர்னாந்து

மேரி நிக்கலஸ் அம்மாள் பர்னாந்து

தோற்றம்: 29 செப்டம்பர் 1948 - மறைவு: 28 மார்ச் 2025

கொழும்பு - புதுச்செட்டித்தெருவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மேரி நிக்கலஸ் அம்மாள் பர்னாந்து அவர்கள் 28-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், இந்தியா உவரியைச் சேர்ந்த அந்தோனி குருஸ் - சவேரியார் அம்மாள் பர்னாந்து தம்பதியினரின் அன்பு மகளும், 

செல்வராஜ் பெர்னாண்டோ அவர்களின் அன்பு மனைவியும்,

பெரிங்டன், அண்டோ, பெர்டி, மில்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 10.00 மணி வரையும், 30-03-2025 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை A.F.Raymond Funeral அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பு புதுச்செட்டித்தெரு புனித வியாழகுல மாதா ஆலயத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2025 04:00)