யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், இல- 54 , 4ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணத்தை வசிவிடமாகவும் கொண்ட செல்வி. மேரி ஸ்ரெல்லா சவரிமுத்து அவர்கள் கடந்த 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் சவரிமுத்து - மேரி லூர்ட்ஸ் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஜோ ஸ்ரனிஸ்லோஸ், சாள்ஸ் அமிர்தநாயகம், ஆன் ஜூலியற், மேரி றீசா கொன்ஸ்ரன்ஸ், பீ ற்றர் ஜெராட் மற்றும் விக்டர் இமானுவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயதுங்க (ஜெயா) அவர்களின் வளர்ப்புத் தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-11-2025 புதன்கிழமை காலை 9:30 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, யாழ் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- ஜெயா.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org

