திருமதி. மேரிதிரேசா (மனோகரி) பெர்னாண்டோ

மேரிதிரேசா (மனோகரி) பெர்னாண்டோ

தோற்றம்: 27 ஜூன் 1943 - மறைவு: 27 மார்ச் 2026

"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்"

(யோவான் 1:25)

மட்டக்களப்பு - கோட்டை கல்லாற்றைப் பிறப்பிடாகவும், மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரிதிரேசா பெர்னாண்டோ அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு - அமிர்தநாயகி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அன்ரனி நோயல் - அரசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நோயல் பெர்னாண்டோ (முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் வாகரை) அவர்களின் ஆருயீர் மனைவியும்,

அன்ரன் நோயல், பிரிட்ஜெட் நர்மதா, பெலிஷியா (கார்திகா), கலிஸ்டா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரியா, திபாகர், தவசந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மேரி ஜோசப்பின் (சரோஜா), மேரி இராஜேஸ்வரி (ராசி), காலஞ்சென்ற மேரி அமலநாயகி (ராணி), காலஞ்சென்ற சிங்கராஜா (ஓய்வு பெற்ற நில அளவையாளர்), மரியம் நிர்மலா, மேரி பிரபா, மேரி அற்புதம் (ரஜினி), மரியதாஸ் (சிறி), அமர்தராஜ் (சௌரி) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

ஜெபசன், ஹரிஷன், மடீஷன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

க்ரேஷியன், ஏஞ்சலின், ஷேரோன், ஷேனோன், மேரியானா, ஜீடிகா, ஜென்சிகா ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 - 9.00 மணி வரையும், 11-04-2026 சனிக்கிழமை காலை 7.30 மணி - 9.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணியளவில் Saint Aiden Roman Catholic Church (3501 Finch Ave, E. Scarborough ON MIW 252) இல் திருப்பலி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் Church the King Catholic Cemetery இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2026 00:00)