Mrs. Masilamani Gunaratnam

Masilamani Gunaratnam

Date of Birth: 14 May 1954 - Deceased: 28 February 2026

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா - Barrie யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மாசிலாமணி குணரட்ணம் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராசையா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், கந்தசாமி - தெய்வானப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

யதுநந்தனன், துஷ்யந்தன், துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு தயாரும்,

அமண்டா, நீரஜா, ரஞ்சித் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனிக்கா, ஈதன் , அபினா, அக்ஸ்யை, ஏய்ரியன், தயானா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-03-2026 புதன்கிழமை அன்று காலை 9:00 - 1:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2026 00:00)